Saturday, December 1, 2007

தமிழில் டைப் செய்வது எப்படி?

ப்படி? எப்படி? தமிழில் டைப் செய்வது எப்படி? இந்த கேள்வி எனக்கு முதன் முதலாக வந்த போது நண்பர் ஜான் பெனடிக்ட் உதவி செய்தார். இதே கேள்வி பலருக்கு இன்னும் இருக்கு, இதோ பதில்கள். இரண்டு விதமா நாம தமிழில் எழுதலாம்.

இந்த பதிவை செய்த பின் நணபர் ராஜகோபால் ஒரு அருமையான வழியை கூறியுள்ளார், இதோ அதையும் சேர்த்து ....

மிக மிக எளிய முறை - Google way - கிழே கண்ட URL-க்கு செல்லுங்கள்

1.http://www.google.com/transliterate/indic/Tamil

2. ஆங்கிலத்தில் டைப் செய்து space press செய்ய தமிழில் வார்த்தை தோன்றும் ...

3. ட்ரை அண்ட் என்ஜாய். இதை பயன்படுத்தும் போது இன்னும் பல பயன்பாடுகளை அறிவீர்... எடுத்துக்காட்டாக, தமிழ் வார்த்தை தோன்றிய பிறகு backspace press செய்ய எல்லா word combination-ம் தெரியும்.

4. அப்புறம் என்னா, cut and paste தான்.


முதலாம் முறை / எளியது: கீழ்கண்ட ஏதாவது ஒரு இணையப் பக்கத்திற்கு சென்று, ஒரு பக்கம் (Text Box-ல்) ஆங்கிலத்தில் டைப் செய்ய, மறு பக்கம் (இன்னொரு Text Box-ல்) தமிழில் வார்த்தைகள் தெரிய வரும். ammaa - என ஆங்கிலத்தில் டைப் செய்தால் அம்மா என தமிழில் காணலாம். பிறகு, அந்த தமிழ் செய்தியை அப்படியே Text Box-லிருந்து (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து Blog site-க்கு சென்று Paste செய்யலாம், Comments பதிவு செய்யலாம்.

1. http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm
2. http://www.tamil.net/ (Scroll down to end of the page to see the Tamil keyboard)

இரண்டாம் முறை: ஏதாவது ஒரு EDITOR, நான் Murasu Editor (http://www.murasu.com/) பயன்படுத்துகிறேன். நீங்க எழுத வேண்டியதை இந்த Editor-ல எழுதி விட்டு, அதை ஒரு File-ஆ Store () (.mrt extension) பண்ணி வைத்துக் கொள்ளலாம். இப்ப நீங்க இந்த தமிழ் Content-ஐ அப்படியே Copy செய்து, அதை Unicode-ஆக மாற்றம் செய்த பிறகுதான் இணையத்தில் பதிவு செய்ய முடியும்.

1. Murasu Editor-ல் தங்கள் செய்தியை டைப் செய்து கொள்ளவும்
2. டைப் செய்த செய்தியை Copy (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து கொள்ளவும்.
3. http://www.suratha.com/reader.htm என்ற இணையதளத்திற்கு செல்லவும் (scroll down to find 2 text boxes)
4. அங்குள்ள Top Text Box-ல், நீங்கள் ஏற்கனவே Clipboard-ல் Copy செய்து வைத்துள்ள செய்தியை இங்கு Paste செய்யவும்.
5. அடுத்து, TSC என்ற Radio button-ஐ check செய்யவும்
6. ட..டா.... இப்போது தங்கள் செய்தி கீழே உள்ள Text Box-ல் தெரிய வரும்.
6. இப்போது, இந்த, கீழே உள்ள Text Box-லிருந்து (Shift+a - Select all, Ctrl+c - Copy) Clipbiard-ல் Copy செய்து Blog site-க்கு சென்று Paste செய்யலாம், Comments பதிவு செய்யலாம்.

7 comments:

Jafar ali said...

இது அனைத்தை விட மிக இலகுவான வழியொன்று இருக்கிறது தமிழில் டைப் செய்ய. நண்பர் பிகேபி அவர்களின் இந்த தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://pkp.blogspot.com/2007/11/blog-post_22.html

Anonymous said...

மிகவும் கஷ்டப்பட வேண்டாம். கீழே உள்ள சுட்டி பயன்படும்

http://www.google.com/transliterate/indic/Tamil

அன்புடன்
இராஜகோபால்

Ravikumar Veerasamy said...

இது ரொம்ப அருமை,
இது போன்ற கருத்துகளைத்தான் நான் எதிர்பார்த்தேன்.
Pointers குடுத்த நண்பர்களே மிகவும் நன்றி....
I like the google way, there is always one answer "GOOOGLE"
இதையும் நான் என் article-ல் சேர்கிறேன்.

Tech Shankar said...

அருமைய்யா.. அருமை.. இதை சாலமன் பாப்பையா சொல்லுவது போல் பாவிக்கவும்

Karan said...

நண்பர் ரவி அவர்களே தங்கள் உதவிக்கு மிக்க நன்றி - நான் இதைத்தான் இவ்வளவு நாட்களாக எதிபர்த்துகொண்டிருந்தேன் - மேலும் உங்கள் நண்பர் ராஜ்குமாரின் வழிமுறை மிகவும் சுலபம்; அவருக்கும் மிக்க நன்றி - இன்றய கால தொழில்நுட்பத்தைகண்டு மெச்சினேன். தங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி மீண்டும் - நண்பர் ரவி அவர்களே தங்கள் சிறு கதை பயணம் மிக நீண்ட நாள் பயணமாக அமைய உங்கள் வாசகர்களின் ஒருவனாகிய என்னுடைய வாழ்த்துக்கள்.
~ கருணாகரன் (கரன்)

Agathiyan John Benedict said...

பயனுள்ள பதிவு; எனக்கும் கொஞ்சம் விளம்பரம் -:)

இதோ மற்றுமோர் எளிய வழி:

http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm

maduraikkaran said...

ரவி அண்ணே !!! கோடி நன்றிண்ணே !!! ரொம்ப கஷ்டப்பட்டுட்டேண்ணே தமிழ்ல, இணயத்துல எழுதுறதுக்கு...

பல ஊரு சுத்தி, பல ஸைட்ட பார்த்து ...

எத்தன பேரு எப்புடி எப்புடி கருத்துகளை பதுவு செஞ்சு இருக்காங்க..!

இவ்வளவு வாய்ப்பு இருக்கும்போது "கற்றது தமிழ்" பிரபாகர் மட்டும் ஏண்ணே 22 கொலை பண்றாரு?

வர்ரம்ணே நம்ம கருத்துகளோட...வாழ்துங்கண்ணே....