Tuesday, October 2, 2007

நேசிக்கிறேன் ...


ன் 3-வயது மகளுடைய பள்ளியில் "Family Value"
பார்ட்டியின் போது "I Love You Forever" என்ற தலைப்பிட்ட
சிறுவர் கதை படித்துக் காட்டினார்கள்.
அந்த கதை, இங்கே கவிதை உருவில்,

னக்கு பசிக்கையிலே
பாலூட்டி சோறூட்டினேன்!
உன் பொக்கை வாய் சிரிப்பிலே
என் பசி மறந்து போனேன்!
நீ தூங்க நான் தாலாட்டினேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

சிங்காரமாய் வளர்ந்தாய்
குறும்புகள் பலவும் செய்தாய்!
நானே சாப்பிடுகிறேன் என்று
வீடெல்லாம் இறைத்து
என்னை கோபமுற செய்தாய்!
அதை மறந்து தினமும்
நீ தூங்க நான் கதை படித்தேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

ளாகி வாலிபனாக
எங்கெங்கோ சென்றாய்!
புது சகவாசம் கொண்டாய்
தாமதமாக வீடு திரும்பி
என்னை வருத்தப்படவும் செய்தாய்!
அதை மறந்து தினமும்
நீ தூங்கியவுடன் மனதில் சொன்னேன்!
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

ல்யாணமாச்சு, பக்கத்து தெருவில்
தனி வீடும் போனாய்!
உனைப் பார்க்க ஆசை
நானும் வந்தேன்!
நீ தூங்கிப் போயிருந்தாய்
அதைக் கண்டு திரும்பி வந்தேன்!
வழியில் எனக்குள் சொல்லிக் கொண்டேன்
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு குழந்தைதானே!

னக்கு வயசாச்சு
படுத்த படுக்கையானேன்!
உனைப் பார்க்க ஆசை
ஆசையில் உனை அழைத்தேன்!
நீ வரும் நேரம்
நான் தூங்கிப் போனேன்!
அதைக் கண்டு நீயும் தாலாட்டினாய்
உனை நான் நேசிக்கிறேன்
என் மூச்சுள்ளவரை நீ எனக்கு அம்மாவே!

3 comments:

Unknown said...

Hi Ravi,
Very touching and it really fascinated me. Keep up the wonderful work.

Regards
Kumaran & Arthi

Agathiyan John Benedict said...

உருப்படியா கதை எழுதுறீய...உருப்படியான கதையைக் கவிதையாவும் உரு மாத்துறீய... உருவாக்குதலும், உருமாற்றுதலும் தொடரட்டும். 'அனுபவம்' என்றில்லாமல் 'கவிதை' என்றே Label போடலாம். அதற்காக தகுதியிருக்கு. சபாஷ்!

Unknown said...

arumaiyana mohzipeiarpu!!! inimaiyana chorkal....

vazhthukal.

- How can I send comments in tamil...

-Siva