Friday, April 1, 2022

இயலாமை

ரோம்ப நாள் கழிச்சு பழைய நண்பர சந்திச்சேன் ... ஒரே கோவமா படபடப்பா இருந்தார் ... என்ன விஷயம்னு விசாரிச்சேன் ... அவர் உடனே 

இந்த யங் [young] ஜெனெரேஷன [generation] பத்தி திங்க் [think] பண்ணா ஒரே டென்சனா [tension] இருக்கு சார் [sir]. பியூச்சர் [future] நினைச்சா ஒர்ரீட் [worried] இருக்கு. இந்த கிட்ஸால [kids] ரெண்டு சென்டென்ஸ் [sentence] கூட இங்கிலீஷ் [English] மிக்ஸ் [mix] பண்ணாம டாக் [talk] பண்ண முடியாது. நம்ம பிரியட்ல [period] அப்படி கிடையாது. யூ [you] நோ [know] மீ [me] தமிழ் லாங்குவேஜ் [language] எனக்கு வெரி [very] இம்பார்ட்டண்ட் [important]. இப்பவும் என்னோட பர்சனல் [personal] கல்ச்சர் [culture] மாறல, நோ [no] சேஞ்சு [change]. என்ன எக்ஸாம்பிலா [example] எடுத்துகங்க. நம்ம லாங்குவேஜ் [language] யூச [use] அதே லெவல்ல [level] வெல் [well] மெயின்டைன் [maintain] பண்றோம். இப்ப எல்லாத்துலயும் இங்கிலீஷ் [English] மிக்ஸ் [mix] பண்ணி டார்ச்சர் [torture] பண்றாங்க. அதுதான் மாடர்ன் [modern] ஸ்டைலாம் [style]. நம்ம லாங்குஜே [language] இம்பார்ட்டன்ஸ் [importance] டோட்டலா [total] ஸ்பாயில் [spoil] ஆவுது. ஸ்க்கூல்ல [school] டீச்சர்ஸ் [teachers] ரொம்ப வேஸ்ட் [waste].   என்ன டீச் [teach] பண்றாங்க. நம்ம டீச்சர்ஸ் [tachers] எவ்வளவு ஸ்ட்ரிக்ட் [strict] இருந்தாங்க. இப்ப சிஸ்டம் [system] கரப்ட் [corrupt] ஆயிடுச்சு, டோடல் [total] பெயிலுர் [failure]. ஸ்க்கூல் [school] பீஸ் [fees], புக்ஸ் [books], டியூசன்னு [tuition], கம்ப்யூட்டர் [computer]எல்லாமே  எக்ஸ்பென்ஸிவ் [expensive]. ஓல்ட் [old] தமிழ் மூவிஸ் [movies] கூட பார்க்க வச்சேன். சிங்கிங் [singing] கிளாஸ் [class] டிரை [try] பண்ணேன். டெய்லி [daily] ஒன் [one] அவர் [hour] டெடிகேட்டடா [dedicated] நானே டைரெக்டா [direct] ஓல்ட் [old] டாபிக்ஸ்  [topics], ஹிஸ்டரி [history], சக்ஸஸ் [success] ஸ்டோரீஸ் [stories] டாக் [talk] பண்ணேன். நோ [no] யூஸ் [use]. வைப்பு [wife] வொர்க் [work] பண்ணியும் எங்க மன்த்லி [monthly] சேலரி [salary] கம்ப்ளீட்டா [complete] எம்டி [empty]. இருந்தும் நோ [no] லங்குவெஜ் [language] இம்ப்ரூவ்மண்ட் [improvement]. திங்க் [think] பண்ணா பிளட் [blood] பிரஷர் [pressure] சூட் [shoot] அப் [up] ஆவுது சார், டாக்டர [doctor] பார்த்து புல் [full] பாடி [body] செக் [check] பண்ணனும், லாங்குவேஜை [language] சேபா [safe] நெக்ஸ்ட் [next] ஜெனரேஷனுக்கு [generation] கன்டினியூ [continue] பண்ண முடியாத லூசர் [loser] சார் [sir] நான், சாரி [sorry]!

நியாமான கோவம்தான் ... உங்க ஒடம்ப கொஞ்சம் பாத்துக்கோங்கன்னு அப்படியே ஓடி வந்துட்டேன்!  

No comments: