Friday, April 1, 2022

வெட்டி

 வெட்டி

ஏன் சார் உங்களுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா? எப்ப பாரு வாட்ஸுஅப்ல பிசியா இருக்கிய்ங்க, எல்லா மெசஜ்க்கும் பதில் போடறிய்ங்க, உருப்படியா ஒரு வேலையும் இல்லையான்னு, நண்பர் ஒருவர் கேட்டார். 

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்க, நமக்கும்  நிறைய பொறுப்பான வேலை இருக்கு, அதுல இதுவும்  ஒண்ணு அவ்வளவுதான் என்றேன். அதெப்படி, இது எல்லாம் ஒரு வேலையா? வெட்டித்தனமா இல்ல இருக்கு என நண்பர் மீண்டும் கேட்டார்.

சரி, நான் விளக்கமா சொல்றேன் ... அப்புறம் நீங்களே சொல்லுங்க வெட்டியா இல்லையான்னு.

நான் பதில் மெசேஜ் போடறதால் மெசஜ் போடடவனுக்கு ஒரு உற்சாக அங்கிகாரம், நம்மல மதிச்சு பதில் போட்டாங்கன்னு ஒரு திருப்தி இருக்கும். அதனால்  நான் அவங்கள சந்தோச பட வைக்கிறேன் ... சில சமயத்தில் என் பதில் ஒரு ஆறுதலா கூட இருக்கும், உறுதுணையாவும் இருக்கும், பாராட்டுதலாவும் இருக்கும், கேலியாவும் இருக்கும், தமாஷா சிரிப்பை ஊட்டி மகிழ்விக்கும் ... இந்த விஷயத்தில நான் ஒரு 'ரசிகனா, சொல்றத தோள் குடுத்து கேட்கறவனா, விமர்சகனா, விகடனா' இருக்கேன் ... நானா ஒரு புது மெசேஜ் போடும் பொது, புது தகவலை சொல்றேன், வெறுமையை நீக்கறேன் , மன உணர்வுகளை வெளிப்படுத்தறேன் ... இந்த விசயத்துல நான் ஒரு 'செய்தியாளனா, குழு கொறடாவா, சுமை இறக்குபவனாய், இங்க உங்களுடன் இருக்கேன் என்பதாய்' இருக்கேன. இதில் எது வெட்டியான  வேலை, என் கடமையில் தவறாம நான் செய்யும் அனைத்துமே பயனுள்ள வேலைதான்  என்று அவரை பார்க்க, அவர் அமைதியாக என்னை பார்த்து சொன்னார் 'நன்றி, இந்த உலகம் வெறுமையா இருக்க கூடாது'!

No comments: